Subscribe:Posts
அரசு மரியாதையுடன் பாரூக் மரைக்காயர் உடல் அடக்கம்: தலைவர்கள் அஞ்சலி | புதுச்சேரிக்கு பெருமைகளை குவித்தவர் பாரூக் மரைக்காயர்: முதல்வர் ரங்கசாமி இரங்கல் | புதுச்சேரி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை வகுத்தவர் பாரூக்: நாராயணசாமி புகழாரம் | பாரூக் மரைக்காயர் மறைவு: புதுச்சேரி அமைச்சரவை இரங்கல் | கேரள கவர்னர் பரூக் மரைக்காயர் – வாழ்க்கை வரலாறு | ஏனாம் கலவரத்தில் 2 பேர் பலி: ஆந்திரா போலீஸ் விரைந்தது | புதுச்சேரியில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மீட்பு: போலீசாருக்கு பாராட்டு | இன்றைய வானிலை: வெப்பநிலை - அதிக அளவு 84° ஃபாரன்ஹீட், குறைந்த அளவு 68° ஃபாரன்ஹீட்

You Are Here: Home » Uncategorized » கடலோர மக்களின் வாழ்வாதார உரிமைக்கான கருத்தரங்கு

coastal-workshopபுதுச்சேரி, மார்ச் 21: புதுச்சேரி ஹோப் நிறுவனம் சார்பில் கடலோர மக்களின் வாழ்வாதார உரிமைக்கான கருத்தரங்கு ஆனந்தா இன்-னில் இன்று (21.3.09) நடைபெற்றது.

புதுச்சேரி மாநில மீனவர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பாளர், முன்னாள் எம்.எல்.ஏ. மா. இளங்கோ தலைமை வகித்தார். ஹோப் இயக்குநர் ஜோசப் விக்டர் ராஜ் முன்னிலை வகித்தார்.

கடலோர மக்களின் வாழ்வாதார உரிமைக் குறித்த சுவரொட்டியை புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஏ.வி.சுப்ரமனியன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

கடற்கரை மண்டல மேலாண்மை அறிவிக்கையை எதிர்த்து ஹோப் நிறுவனத்துடன் இணைந்து கடலோர கிராம மக்கள் நடத்திய போராட்டங்கள், கடிதப் பிரச்சாரம் மற்றும் பொது விசாரனை ஆகியவற்றை கடலோர கிராம உள்ளாட்சி தலைவர்கள், கடலோர கிராம பஞ்சாயத்து தலைவர்கள, கடலோர சமுதாய அமைப்பு தலைவர்கள் மதிப்பீடு செய்தனர். எதிர்காலத்தில் சுனாமி வீடுகள் கட்டுவதை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை விமலா வரவேற்றார். மல்லிகா நன்றி கூறினர்.

Leave a Reply


1 × six =

© 2009 புதுச்சேரி செய்திகள்